குடும்பம்

தந்தைவிதைத்தார். தாய்முளைக்கச்செய்தாள்.!
மகளாய் மண்ணிலுதித்தேன்....
உச்சிமுகர்ந்தாள் பாட்டி, உற்சாகத்தில் தாத்தா,
உற்றார் வாழ்த்துமழை, உறவினர் முத்தமழை,
நனைந்தன கன்னங்கள், வீறிட்டு அழுதேன்,
விரல்நுனி கொடுத்து தேற்றினாள் அன்னை.
விரல்நுனி கொடுத்து தேற்றினாள் அன்னை.
காலம் கடந்தது.....................
உருண்டேன்.. புரண்டேன்... எழுந்து நின்றேன்
எடுத்துவைத்தேன் முதல்அடி தடுமாறி விழுந்தேன்
எழுந்து வா.....புன்னகைத்தார் தந்தை
"வீழ்ந்தால் எழு" கற்றேன் முதற்பாடம்
அண்ணன் அள்ளி எடுத்தான்
பிதுங்கிபோன என் விழி நனைந்தது
அன்னைதந்தை கண்டுகொள்ளவில்லை
அறிந்தேன், அண்ணன் அன்பு அதுவென்று-அவன்
இரகசியம் பல அறிந்தும் மறைத்தேன்-என் மிரட்டலுக்கு
பயந்ததாய் பாவித்து அல்வா அதிகமளித்தான்...
இடறல்களில் எனக்கு காவலாய் என் அண்ணன்.
சோகங்களை சமயலறையிலே மறைத்தாள் அம்மா.
உழைத்து களைத்து வந்தார் அப்பா.,
ஓடிசென்று தண்ணீரளித்தேன் புத்துணர்வடைந்தார்.
பேனா வேண்டுமென அடம்பிடித்தேன்.,
முந்தானை முடிச்சவிழ்த்து சில்லரை தந்தாள் பாட்டி.
என்னை துங்கவைக்கும் திட்டத்தில்
கதைசொல்லி களைத்துபோனார் தாத்தா
சொர்க்கத்தை மண்ணில் காட்டும்
நலமான குடும்பம்!!!!!!!!!!!!!!!!!!!!